500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் இலங்கை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.
கடந்த சில வாரங்களாக அப்பலோ மருத்துவமனையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிவதற்கு ஈழத்தமிழர்கள் குழு ஒன்று மருத்துவமனை சென்று திரும்பியுள்ளது.
கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர்.
இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சமண மத வழக்கப்படி, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-இந்தியா முழுக்க உளவுத்துறை முழு கண்காணிப்பு மேற்கொண்டுள்ளது.
-அடுத்த ஒரு மாதம் வரை கடும் அலர்ட் உத்தரவுகளை பிறப்பபிக்கப்படுகிறது.
-சென்னை உட்பட முக்கிய நகரங்களில் கூடுதல் போலீஸ் குவிக்கப்படும்.
-நவம்பரில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை தள்ளிவைத்தது பாகிஸ்தான்.
காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது .
காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டபடி, நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.