சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர பேரழிவு ஒன்று ஏற்பட வாய்புள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுனாமி போன்றதொரு பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கனமழை, வெள்ளம் என்பன ஏற்படவுள்ளதாக ஆற்காட்டி பஞ்சாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருட இறுதிக்குள் பல தடவைகள் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையை ஜலப்பிரலயம் என்று குறிப்பிடும் மேற்படி ஜோதிடர், சென்னை, நெல்லை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் கோயமுத்துார் போன்ற பகுதிகள் பலத்த பாதிப்பை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்மித்த கடற்கரைகளில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் வழமைக்கு மாறாக பயங்கரமானதொரு நிலை காணப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் தாழமுக்கம் மற்றும் புயல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால், அது இலங்கையையும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் முன்கூட்டியே இவ்வாறான ஒரு அறிவுறுத்தலை விடுப்பதாக குறித்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.