ஜெ., உடல்நலம் குறித்து தகவல் பரப்பிய
தமிழச்சி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2016 (வெள்ளிக்கிழமை)
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழச்சி என்ற முகநூல் கணக்கு மூலமாக தவறான தகவல் பரப்பியதாக பிரான்சில் வசிக்கும் தமிழச்சி மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் போலீசில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழச்சி (Tamizachi) தனது முகநூலில், சென்னை போலீஸ் என் மீது வழக்கு பதிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலிஸ் விசாரணைக்கு காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.