யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் இலங்கை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முற்றுகையில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மைல்லை சத்யா, கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.