இலங்கையில் 3 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.கொழும்பை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று முதல் மின்சார விநியோகத்தடை அமுலுக்கு வருவதாக மிசாரசபை மேலும் கூறியுள்ளது.
நல்லிணக்கச் செயன்முறைகள் தாமதமடைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவியுள்ள இனவாதக் கொள்கையே காரணம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அண்மையில் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அழைத்துக்கொண்டே செல்வேன் என்று அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளா பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் புதிய கட்சிக்கான சின்னம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பெயர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் 3 நாட்கள் பயணமாக நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அமைப்புகள்.....
வத்தளை - ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை தாம் பாராட்டுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய 17 வயதுடைய பாடசாலை மாணவனை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப்பிரிவினர் இன்று (29) கைதுசெய்துள்ளனர்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அரசின் குடியுரிமை இல்லாமல், படித்துவந்த இலங்கை அகதிகளின் 55 குழந்தைகள் பாடசாலைகளில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டனர்.