ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அமைப்புகள் போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2016 (வியாழக்கிழமை)
ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் 3 நாட்கள் பயணமாக நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை வந்துள்ள பான் கீ மூன் இன்று இரவு அந்நாடு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங், எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். நாளை மறுதினம் யாழ்பாணம் சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இந்நிலையில் ஐ.நா.பொதுச்செயலாளர் வருகையொட்டி அங்குள்ள சிங்கள அமைப்புகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கொழும்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் உள்ளூர் நீதிபதிகள் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு வாதிட்டு வருகிறது. ஐ.நா. பொதுச்செயலரின் பயணத்தின்போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.