ஐப்பானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 30 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (22) முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஜப்பானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
30 இலங்கையர்களுடன் 67 ஜப்பானிய பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களும் இலங்கை வந்தனர்.
சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்த இலங்கையர்களை ஜப்பானிய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.