ஐ.நாவின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது – பர்ஹான் ஹக்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2016 (புதன்கிழமை)
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளா பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊடக அறிக்கைகளில் இலங்கை தொடர்பிலான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வாறு இலங்கை பற்றி கருதுகின்றது என்பது பற்றி அறிக்கை விட எவருக்கும் சுதந்திரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் தெளிவானதும் ஸ்திரமானதுமான நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் அமைப்பே வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.