சட்டசபை தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 12,700 துணை ராணுவ வீரர்கள் தமிழகத்துக்கு வந்தனர். கொல்கத்தா நகரம் டங்குனியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 1,025 துணை ராணுவத்தினர் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது.
இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார். திருச்சியில் ஜெயலலிதா இன்று மாலை 8 மாவட்டங்களைச்சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரவு திரட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசினார்.
சிறைத்துறை அதிகாரி ஒருவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஜெயலலிதா மேற்கொண்ட சுற்றுப்பயனப் பொதுக்கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடை பெற்றது.
ஒரு பதவியில் இருப்பவர் மற்றொரு பதவிக்காக போட்டியிடக் கூடாது. நூம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கு தடைவிதிப்போம் என்று கீரமங்கலத்தில் பேசினார் சீமான்.