ஜெ., கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி : 10 பேர் படுகாயம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2016 (புதன்கிழமை)
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஜெயலலிதா மேற்கொண்ட சுற்றுப்பயனப் பொதுக்கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடை பெற்றது.
இன்று காலை முதலே பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் அதிமுகவினரால் கூட்டி வரப்பட்ட மக்கள் கோவை நெடுஞ்சாலையில் கடுமையான வெயிலில் சிக்கிக் கொன்டனர்.
போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் நிழல் இல்லாததால் வெயில் கொடுமை மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மகுடஞ்சாவடியை சேர்ந்த பச்சியன்னன் (வயது - 55 ) என்பவர் மாலை 3.00 மணிக்கு உயிரிழந்தார். இவரது உடல் சேலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஆத்தூர் அருகில் உள்ள கடம்பூர் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது - 65) என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி மாலை 5.00 மணியளவில் உயிரிழந்தார். இவரது உடல் இன்னும் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேரவில்லை.
மேலும், இரும்பாலை அருகில் உள்ள சுருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த பஞ்சமி (ஆண், வயது-80) மற்றும் சேலம் கிச்சிப்பாளையம், காந்தி மக்கான் தெருவில் உள்ள பழனிசாமி (வயது-48), இங்கன சாலை பகுதியை சேர்ந்த அஞ்சலை, இலட்சுமி,அன்பழகன்,சுப்ரமணி,அய்யண்ணன்,அங்கையற்கண்ணி,லீலாவதி என பத்துக்கும் அதிகமானவர்கள் மயக்கமுற்றும் கூட்ட நெரிசலில் சிக்சி காயமுற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.