டெல்லி வணிக வளாகத்தில் ராகுல் காந்திக்கு 2 கடைகள் பா.ஜனதா எம்.பி.குற்றச்சாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2016 (வியாழக்கிழமை)
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பற்றி பாரதீய ஜனதா எம்.பி., கிரிட் சோமையா நேற்று ஒரு பிரச்சினையை எழுப்பினார்.
அப்போது அவர், “இதுவரை ராபர்ட் வதேராவின் பரிவர்த்தனை பற்றித்தான் கேள்விப்பட்டோம். இப்போது ராகுல் காந்தியின் பரிவர்த்தனை பற்றியும் கேள்விப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார். ராகுல்காந்தி வணிக வளாகத்தில் கடை வாங்கி இருப்பதை மறை முகமாக அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றி ராகுல் காந்தி, நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஆமாம், டெல்லி வணிக வளாகத்தில் நான் கடைகள் வாங்கினேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இது குறித்து எனது (தேர்தல்) அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளேன்.” என கூறினார்.
ராகுல் காந்தி வாங்கிய கடைகள் முறையே 996.98 சதுர அடி மற்றும் 514.44 சதுர அடி கொண்டவை. அதன் விலை சதுர அடிக்கு ரூ.9 ஆயிரத்து 750 என தகவல்கள் வெளியாகி உள்ளன. 2010-ம் ஆண்டு அந்த கடைகளை ராகுல் காந்தி விற்பனை செய்து விட்டதாக கூப்படுகிறது.