தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2016 (புதன்கிழமை)
இதில் 4 கம்பெனி துணை ராணுவத்தினர் (510 பேர்) தஞ்சாவூருக்கும், 6 கம்பெனி துணை ராணுவத்தினர் (515 பேர்) திருச்சிக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக செல்ல உள்ளனர்.
ஹவுராவில் இருந்து இன்னொரு சிறப்பு ரெயில் மூலம் 964 துணை ராணுவத்தினர் அதிகாலை 3.30 மணிக்கு சென்டிரல் வந்தடைந்தனர். இதில் 6 கம்பெனி துணை ராணுவத்தினர் (323) விழுப்புரத்திற்கும், 4 கம்பெனி துணை ராணுவத்தினர் (308 பேர்) திருவண்ணாமலைக்கும், 3 கம்பெனி துணை ராணுவத்தினர் (333 பேர்) திருவள்ளூருக்கும் செல்ல உள்ளனர்.
காலை 8.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 126 பேர் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை வந்தடைந்தனர். இதில் 6 கம்பெனி துணை ராணுவத்தினர் (819 பேர்) மதுரை மாநகருக்கும், 5 கம்பெனி துணை ராணுவத்தினர் (602 பேர்) மதுரை புறநகருக்கும், 2 கம்பெனி துணை ராணுவத்தினர் (705 பேர்) ஈரோட்டிற்கும் பாதுகாப்பு பணிக்காக செல்ல உள்ளனர்.
காலை 10.30 மணிக்கு ஹவுராவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 829 துணை ராணுவத்தினர் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். இதில் 6 கம்பெனி துணை ராணுவத்தினர் (409 பேர்) காஞ்சீபுரத்துக்கும், 5 கம்பெனி துணை ராணுவத்தினர் (420 பேர்) கடலூருக்கும் செல்ல உள்ளனர்.
காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இன்னொரு சிறப்பு ரெயில் மூலம் 1,540 துணை ராணுவத்தினர் வந்தனர். இதில் 4 கம்பெனி துணை ராணுவத்தினர் (307 பேர்) சென்னையிலும், 1 கம்பெனி துணை ராணுவத்தினர் (411 பேர்) நாமக்கல்லிலும், 3 கம்பெனி துணை ராணுவத்தினர் (411 பேர்) கிருஷ்ணகிரியிலும், 3 கம்பெனி துணை ராணுவத்தினர் (411 பேர்) தர்மபுரியிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தலையொட்டி சிறப்பு ரெயில்கள் மூலம் சென்னைக்கு வந்த துணை ராணுவத்தினரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 484 ஆகும். ரெயில் மூலம் சென்னையை வந்தடைந்த துணை ராணுவத்தினர் உடனடியாக பாதுகாப்பு பணிகள் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் அனுப்பப்பட்டனர்.
ஒரு கம்பெனியில் 72 சதவீதம் பேர் பணியில் இருப்பவர்கள் ஆவார்கள். மீதமுள்ள 28 சதவீதம் பேர் உதவியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கோவைக்கு ரெயில் மூலம் 12 கம்பெனி துணை ராணுவத்தினர் (1,641 பேர்) சிறப்பு ரெயில் மூலம் நேற்று சென்றடைந்து உள்ளனர். சேலத்தில் 14 கம்பெனி துணை ராணுவத்தினர் (1,236 பேர்), ஈரோட்டில் 14 கம்பெனி துணை ராணுவத்தினர் (1,847 பேர்), திருச்சியில் 12 கம்பெனி துணை ராணுவத்தினர் (1,521 பேர்) சென்று உள்ளனர்.
இந்த துணை ராணுவத்தினர் அங்கிருந்து அருகில் உள்ள பிற மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பிரித்து அனுப்பப்படுவார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நேற்று மட்டும் மொத்தம் 12 ஆயிரத்து 729 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும், நாளையும் 86 கம்பெனி படை வீரர்களும் வருகிறார்கள்.