பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்லையா தற்போது பிரிட்டனில் உள்ளார்.மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததை அடுத்து கடந்த வாரம் அவரது ராஜாங்கக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது.
மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் பீர் ஆகிய நிறுவங்களின் முன்னாள் உரிமையாளர்.மல்லையாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளதாக இந்தியாவின் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அவரது ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடப்பட்டதே இதற்கு காரணம். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மல்லையா மறுத்து வருகிறார்