தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும், உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று திறந்து வைக்கவுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான .....
யாழ். குடாநாட்டில் அமைதியை சீர்குலைப்பதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவ்வாறு அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியை அரசுடைமையாக்கி அங்கு 400 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.
போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இளவாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 46 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பத்தை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.
கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கவிருந்த அபிவிருத்திகளை அங்குள்ள சில அரசியல் சக்திகளும் சில அரசசார்பற்றநிறுவனங்களும் தடுத்து நிறுத்தியுள்ளன. எதிர்ப்பு தொடர்ந்தால் அந்த திட்டத்தை வடக்குக்கு மாற்றுவோம்
அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சில உறுப்பினர்கள் சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர்..........
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் சமஷ்டி ஆட்சி முறையை தமிழ் மக்கள் விரும்புவதாக, லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளதாக உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லை என வெளியாகும் கருத்துக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும்
வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடுகள் அமைக்கப்படாது, என்றும், கல் வீடுகளே அமைக்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் உறுதியளித்தார்.