வலி.வடக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது இராணுவம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளதாக உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள 400 ஏக்கர் காணிகள் இன்னும் சில வாரங்களில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற காலத்தில் இருந்து வடக்கில் 2,175.5 ஏக்கர் காணிகளும், கிழக்கில் 1,055 ஏக்கர் காணிகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. வடக்கில் உள்ளக இடப்பெயர்வை சந்தித்த மக்களை மீளக்குடியேற்ற காங்கேசன்துறையில் 65 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் குடியமர்த்த திட்டம் ஒன்று உள்ளது என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.