புதுப் பொலிவுடன் யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று திறந்து வைக்கவுள்ளனர்.
யாழ்ப்பாண நகரின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம் கடந்த 1997ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்திய நிதியுதவியுடன் 7 கோடி ரூபாய் செலவில் குறித்த மைதானம் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைதானத்தின் திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி புது டில்லியில் இருந்து video conferencing மூலமும் கூட்டாக மைதானத்தை திறந்து வைக்கவுள்ளனர்.
இதேவேளை, புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பார்வையிடும், யோகா செயல்விளக்க நிகழ்வில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.