இடப் பெயர்வுகள், சொத்து இழப்புக்கள் போன்ற பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் இன்றும் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை. நல்லூர் ஆலய முன்றலில் உயிரிழந்த மாவீரர்கள் உட்பட அனைவருக்கும் வீரவணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துவோம் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸார் ஐவரையும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று முழுகடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ‘ஆவா’ குழு உரிமை கோரியுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை கொலை செய்வதற்கு ரூ 25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து அதனை புலிகள் மீது குற்றம் சுமத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்.........
யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்றுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விரக்திக்கான காரணங்களை தெளிவுப்படுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இன்று யாழில் நடைபெறும் நண்பேண்டா இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதன்முறையாக பாலசுப்ரமணியம் அவர்களும் கங்கை அமரன் அவர்களும் யாழில் கேலிஹப்டர் மூலமாக வந்து இறங்கினார்கள் .
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக.....
தெற்கில் தேர்தலில் தோற்று, சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்படுகின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.