யாழ்ப்பாணத்தில் 13 மாடி இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு! - சீனாவுடன் ஒப்பந்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2016 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணத்தில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாராளுமன்றில் நேற்று டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 13 மாடியைக் கொண்ட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியாகியுள்ளன. இருந்த போதிலும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கை ஒழுங்குமுறை பிரகாரம் ஆரம்பிக்கப்படவில்லை. இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது பரவலாக ஆராய்ந்தேன். அத்துடன், குறித்த இருதய சத்திர சிகிச்சையில் பணியாற்றுவதற்கு 4 பேருக்கு கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.