ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! இலங்கை அரச இணையத்தளங்கள் மீது தாக்குதல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2018 (வெள்ளிக்கிழமை)
மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இலங்கை தூதுவராலயங்கள் இணையத்தளங்கள், இலங்கை அரச நிர்வாக இணையங்கள் மற்றும் இலங்கை அரச செய்தி ஊடக இணையங்கள் உள்ளிட்ட 300இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுருவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முடக்கப்பட்ட குறித்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுபோல கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியும் 200இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இவ்வாறு முடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவை ஆட்டம்காண வைத்துக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் இலங்கை அரசையும் கதிகலங்க வைத்திருக்கின்றது என தற்போது இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும், இலங்கை துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத் தகவல்கள் கசிந்திருக்கக்கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.