வவுனியாவில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உணவகங்கள்! மக்கள் விசனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2017 (வியாழக்கிழமை)
கடந்த 25ஆம் திகதி இரவு இடம்பெற்ற வவுனியா வர்த்தகர் சங்க உறுப்பினர்களின் கலந்துரையாடலில் குறித்த முடிவு எடுக்கப்பட்டு அனைத்து வர்த்த நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (27) மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.
எனினும் வவுனியா ஹொரவபொத்தானை பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்த போதும் ஒரு சில உணவகங்கள் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமது உணவகங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.