இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)
சசிகலா மற்றும் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் அவர்களுக்கு இடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற நெருக்கடி ஏற்பட்டது இதை அடுத்து தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பினரும் முறையிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பில் யாரும் அதிமுக கட்சி பெயரையோ இரட்டை இலை என்ற சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது. என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.