இன்று (10.01.2017) நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு மைதானம் ஆர்னோல்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில் முன்னனி கழகங்களில் ஓன்றகாவும் வடமாகணத்தில் பழம்பெரும் விளையாட்டுக் கழகமாவும் பல சாதனைகளை நிகழ்த்திய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு ஓரு விளையாட்டுக் மைதானம் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது.
எனவே இவ் விளையாட்டு மைதானம் என்பது சென்மேரிஸ் மக்களுக்கு அவர்களின் வாழ்கையோடு இரண்டரகலந்த விடையமாக கருதப்பட்டும் பார்கப்பட்டும் வந்தது
இவ் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு சென்மேரிஸ் மக்கள் பல கஸ்ரங்ளுக்கு மத்தியிலும் கடுமையான உடல் உழைப்பினாலும் புலம் பெயர்மக்களின் பங்களிப்பாலும் இவ் மைதானம் என்பது கைகூடியுள்ளது என்பது மகிழ்சிக்குரிய விடையமாகும்.இவ் மைதானம் கிடைப்பதற்கு அரும்பாடுபட்டு உழைத்த அனைவரையும் நாவாய்மண் வாழ்த்தி தலைவணங்குகின்றது.உங்கள் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகின்றோம்.