துப்பாக்கிகளை வழங்கி வைத்தார் வட மாகாண சபை உறுப்பினர் சிவநேசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2016 (புதன்கிழமை)
முல்லலைத்தீவு மாவட்டத்தின் 18 கமக்கார அமைப்புக்களுக்கு விவசாய நடவடிக்கையை பாதிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வட மாகாண சபை உறுப்பினர் சிவநேசன் துப்பாக்கிகள் வழங்கி வைத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய 18 துப்பாக்கிகளை 18 கமக்கார அமைப்புக்களிடமும் இன்று காலை முள்ளியவளை கமநலசேவை நிலையத்தில் வைத்து வழங்கிவைத்தார்.
குரங்குகளின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கான துப்பாக்கிகளை வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் வழங்கி வைத்துள்ளார்.