விஜயகாந்த் படமான “கண்ணுபடப்போகுதய்யா” படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவரின் நண்பரின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை.
உடனடியாக ஆபரேசன் செய்தால் தான் குழந்தை உயிர் பிழைக்கும் என்ற நிலையில், விஜகாந்த்திடம் அந்த உதவி இயக்குனர் அழைத்து சென்று இருக்கிறார்.
விசாரித்த விஜயகாந்த்,’ உதவி கேட்டு இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க.. நீ வேற போயா” என்க… “மொத்தம் 2 லட்சம் ஆபரேஷனுக்கான தொகையில்.. ஒன்னேகால் லட்சம் ரெடி பண்ணி இருக்கோம்.ஒரு எழுபத்தி ஐந்தாயிரம் மட்டும் தான் ரெடி பண்ணனும். உங்களால் முடிந்ததை கொடுங்க” என்று கேட்க, எரிச்சலான விஜயகாந்த் திட்டு திட்டு என்று திட்டிவிட்டு கோபமாக எழுந்து போய்விட்டாராம்.
இதை தன் நண்பரான உதவி கேமராமேனிடம் சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போயிருக்கிறார்.
ஷூட்டிங்கில் இருந்த அஜித், இவர்களை உபசரித்துவிட்டு…ஷூட்டுக்கு போய்விட்டாராம்.
என்னடாது… இப்படி ஆயிடுச்சி என்று காத்திருக்கையில்…ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் ,’ சரி ஸ்க்ரிப்ட் சொல்லுங்க..” என்றபோது தான்…நாம் கதை சொல்ல வந்திருக்கோம் என்று அஜித் நினைத்து விட்டார் என்று இவர்களுக்கு புரிந்திருக்கிறது.
அதன் பின், அவர் உதவி கேட்டு வந்ததை பத்தி சொன்னவுடன்,’ முன்பே சொல்லவேண்டாமா’என்று கோபித்துக்கொண்டு..”எவ்வளவு” என்று கேட்க…விஜயகாந்த் போல திட்டுவாரோ… என்று “உங்களால் முடிந்ததை தாருங்கள்’ என்று சொல்ல…” மொத்தம் எவ்வளவு?” என்று கேட்டு அதட்டியிருக்கிறார் அஜித்.
“எழுபத்து ஐந்து ஆயிரம் ” என்றவுடன், உடனே செக் போட்டு கொடுத்து , பத்திரிகைகளுக்கு சொல்லக்கூடாது என்று கண்டிஷனும் போட்டாராம்