இந்தியாவில் பிரபலாமான கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போன்று தற்போது தமிழகத்தில் மினி ஐபிஎல் என டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இதில் நேற்று நடைபெற்ற சென்னை-கோவை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஹைடன் மற்றும் பிரட்லீ ஆகியோர் தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான வேஷ்டி, சட்டையில் வலம் வந்தனர்.
ஹைடன் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வேஷ்டி, சட்டையில் வந்து அசத்தினார். பின்னர் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கபாலி படம் பார்த்தார். தற்போது மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் வேஷ்டி, சட்டையில் வலம் வந்து தமிழ் கிரிகெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.