முன்னாள் போராளிகளின் திடீர் மர்ம மரணம் குறித்து எந்தவொரு தகவல்களும் தனக்கு தெரியாது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2016 (வெள்ளிக்கிழமை)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் திடீர் மர்ம மரணம் குறித்து எந்தவொரு தகவல்களும் தனக்கு தெரியாது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே கூறியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பதில் அளித்த ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னதாகவே அது தொடர்பாக அறிந்தேன். எனக்கு எவரும் இந்த மரணம் குறித்து தெரியப்படுத்தவில்லை. எனவே ஆதாரபூர்வமாக தெரியப்படுத்தப்படுகின்ற போது அது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல என்னால் முடியும். அதேவேளை வட மாகாணசபையில் இந்த விடயம் பேசப்பட்டுள்ளமையினால் அது ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்வதற்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.