இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞரின் அடாவடித்தனம்! - தந்தையும் மகனும் காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2016 (வெள்ளிக்கிழமை)
கிளிநொச்சி- முழங்காவில் பிரதேசத்தில், விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் தந்தையும், மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் வயது 23 என்பவருமே நேற்றுமுன்தினம் இரவு தாக்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ் இளைஞரான குறித்த இராணுவச் சிப்பாய் அண்மையில் இராணுவத்தில் இணைந்துக்கொண்டவா் என்றும், விடுமுறையில் வீடு சென்றிருந்த போதே அயல் வீட்டாரான மேற்படி தந்தையையும், மகனையும் கடந்த காலகொடுக்கல் வாங்கல் பிணக்கு ஒன்று காரணமாக தான் யாா் என்று தெரியுமோ என்று கடும் தொணியில் கேள்வி எழுப்பியவாறு தாக்கியதாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவோர் தெரிவித்தனர். சம்பவம் தொடா்பில் குறித்த இராணுவ சிப்பாயை முழங்காவில் பொலீஸார் கைது செய்த போதிலும் விடுவித்துள்ளனர்.