நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் படபிடிப்பில் இடுப்பை கிள்ளிய மர்மநபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2016 (வெள்ளிக்கிழமை)
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படம் ரேமோ. இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்கிறார். ஏ24 ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்கிறார். அவரது முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று இரவு டைரக்டர் ஷங்கர் வெளியிட்டார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ கெட்டப்தான முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெண் வேடத்தில் அவர் நடித்திருக்கும் நர்ஸ் அக்கா கெட்டப் பர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நிஜ பெண் போலவே காட்சி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன் மேலும், அவ்வை சண்முகியில் கமல் பெண் வேடத்துக்காக அதிகமான சிரத்தை எடுத்துக்கொண்டது போன்று இந்த நர்ஸ் அக்கா வேடத்துக்காகவும் மணிக்கணக்கில் மேக்கப் போட்டு பெண்களின் மேனரிஸத்தை தனக்குள் கொண்டு வந்து நடித்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
ரெமோ படத்தின் கதை எனக்கு பிடித்தது. ஆனால் இதில் பெண் வேடம் போட்டு நடிப்பதுதான் கஷ்டமாக இருந்ததுபெண் வேடத்தில் வெளியே வருவதற்கு தயக்கமாக இருந்தது. அந்த மேக்கப்பில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பை பார்க்க வந்த பலருக்கு பெண் வேடத்தில் இருப்பது நான்தான் என்று தெரியவில்லை. படக்குழுவினரிடம் என்னை பார்த்து கதாநாயகியின் பெயர் என்ன என்று கேட்டு நச்சரித்தார்கள். படப்பிடிப்பில் யாரோ ஒருவர் என் இடுப்பை கிள்ளி விட்டுப்போனார்.இவ்வாறு அவர் கூறினார்.
அதோடு, பாடல் காட்சியிலும் சிவகார்த்திகேயனை ஒரு பெண்ணாகவே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக நடன மங்கைகள் ஆடுவது போன்று நளினமான உடல் அசைவு களை கொடுத்து அவரை ஆட வைத்திருக்கிறாராம் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம். அதனால் ரெமோ படத்தின் பாடல் காட்சிகளும் பிரமிக்கத்தக்கதாக உருவாகியிருக்கிறாராம்.