பிகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி குழந்தைகள், பெண்கள், உட்பட 93 பேர் உயிரிழந்துள்ளனர்.பிகார் மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இடி, மின்னல் தாக்கியத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இடி, மின்னலுக்கு பெண்கள், குழந்தைகள் என 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிகார் மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு பீகார் பேரழிவு மேலாண்மை நிறிவனத்தின் மூத்த தலைவர் அனிருத் குமார் தெரிவித்துள்ளார்.
இடி தாக்கியதில் சாலையோர மரங்கள் எல்லாம் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மழைக்கால சேதங்களையும், உயிரிழப்புகளையும் தடுக்க பிகார் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மழைக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.