இது நம்ம ஆளு’ படத்துக்கு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும் என்று பட தரப்பு கேட்டபோது ஏற்கனவே கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக நயன்தாரா நடிக்க மறுத்தார். இதையடுத்து ஆண்ட்ரியா நடிக்க பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கில் ‘பாபு பங்காரம்’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் தமிழில் பிஸியாகிவிட்டார் நயன்தாரா. இதனால் அப்படத்துக்கு கால்ஷீட் தருவதை தாமதப்படுத்தி வந்தார். நயன்தாரா இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலையில் பட குழுவினர் தவித்தனர்.
பொறுத்துப்பார்த்த பட தரப்பு நயன்தாரா கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதை அம்பலப்படுத்தினர்.கடந்த 2 ஆண்டுக்கு முன் கால்ஷீட் பிரச்னை காரணமாக நயன்தாராவுக்கு தெலுங்கில் நடிக்க 1 வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதுபோல் புகார் செய்தால் தடை வர வாய்ப்புள்ளதை எண்ணி பயந்தார். உடனடியாக ‘பாபு பங்காரம்’ குழுவினருக்கு கால்ஷீட் கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தார். வரும் ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை மாருதி இயக்குகிறார்.