துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை விட என் மீதுதான் ஒபாமாவுக்கு கோபம் அதிகம்: டொனால்டு டிரம்ப்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)
அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ள டொனால்டு டிராம் முஸ்லீம்களுக்கு எதிரான நிலையை கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து இருந்த நிலையில், ஒபாமாவை மிக மோசமான அதிபர் இன்று விமர்சித்துள்ள டொனால்டு டிரம், ஒர்லாண்டாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீதான கோபத்தை விட தன் மீதுதான் ஒபாமாவுக்கு கோபம் அதிகம் என்று தெரிவித்துள்ளார்
வடக்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- ஒர்லாண்டாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீதான கோபத்தை விட என் மீதுதான் அவருக்கு (ஒபாமா) கோபம் அதிகம்,. இது போன்ற கோபம் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீதும் இது போன்ற கொலையாளிகள் மீதும் இருக்க வேண்டும். நமக்கு இஸ்லாமிய அடிப்படை வாத பயங்கரவாதம் பிரச்சினையாக உள்ளது” என்றார்.