பிரான்சில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர கூடும்: பிரதமர் வால்ஸ் பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)
பிரான்சில் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடிந்த வரை அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் ஆனால் இன்னும் பல தாக்குதல்கள் நடைபெற கூடும் என்றும் பிரதமர் மேனுவேல் வால்ஸ் வானொலியில் இன்று கூறியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்டவை என கருதப்படும் 15 தாக்குதல்களை உளவு பிரிவு மற்றும் போலீசார் முறியடித்துள்ளதுடன் அவர்களை கண்டறிய இடைவிடாது தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் தொடர்ந்து கூறும்பொழுது, தீவிரவாதிகளின் தொடர்புகளை கண்டறிய வேண்டிய தேவையுள்ள நிலையில், போலீசார் மற்றும் உளவு பிரிவுகளுக்கு தேவையான தகவல்களையும் தர வேண்டியுள்ளது. ஆனால் பிரான்ஸ் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற கூடும் என அவர் கூறியுள்ளார். பல ஒன்றுமறியாத நபர்கள் உயிரிழக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.