நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக, ஓர் அர்பனிப்பு மிக்க ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியதும் அல்லாமல் எம் மக்களுடன் சேர்ந்து ஊரின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றி, எம் ஊர் மக்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்வில் சிறந்த வழிகாட்டியாக இருந்த எம் முன்னாள் அதிபர் F. X .அன்ரன் (Dip in Edu, MA, M Phil, S.L.P.S - 1 ) அவர்கள் நாளை ( புதன்கிழமை ) யாழ் கல்வி வலயத்தின், நல்லூர் கோட்ட கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றவிருக்கின்றார்.
இத்தருனத்தில் நாவாய்மண் இணையம் சார்பிலும் நாவாய்மண் மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதிபர் அவர்கள் மேலும் பதவி உயர்வு பெற மனம் மகிழ்ந்து வாழ்த்துகின்றோம்.