ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ், தனது அத்தையை (கணவரின் தாய்) முதன் முதலாக சந்தித்தபோது அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை ஒரு நேர்காணலில் விவரிக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், தனது கணவரின் தாய் பார்பரா எமோஃப் தன்னை முதலில் சந்தித்தபோது, தனது கன்னத்தில் கை வைத்ததாகவும் அப்போது அவர், "ஓ இவளை பாருங்களேன். தொலைக்காட்சியில் பார்ப்பதை விட இவள் அழகாக இருக்கிறாள். மைக் இவளை பாருங்களேன்," என்று அவரைப் போலவே பேசி சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து, விழுந்து சிரிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த ட்விட்டர் பகிர்வு காணொளியை சனிக்கிழமை பார்த்த ஆயிரக்கணக்கானோரும் அதற்கு லைக்குகளை குறிப்பிட்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.