பிரதமர் எதுவார் பிலிப், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யேஸ் புசின் (யுபnèள டீரணலn)இ மற்றும் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரொன் ஆகியோர் மீதும், Covid-19 இன் நிர்வாகம் தொடர்பாக ஐந்து வழக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, குடியரசு நீதிமன்றமான CJR (Cour de justice de la République) தெரிவித்துள்ளது
இந்தக் குடியரசு நீதிமன்றமான CJR இல் மட்டுமே, அரசாங்கப் பதவிகளில் உள்ள, அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் மீது கூட, அவர்கள் பதவியில் இருக்கம் போதே வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யமுடியும்.
கொரோனா வைரசிற்கான நடவடிக்கைகளை முறையான தருணத்தில் செய்யாமையினால், திட்டமிடப்படாத படுகொலை (homicide involontaire), ஆபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றாமல் விட்டமை (non-assistance à personne en danger), மற்றும் தொற்றுநோய்ப்பரவலைத் தகுந்த நேரத்தில் தடுக்கத் தவறியமை, ஆகிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நோய்த்தொற்றிற்கு ஆளானவர்கள், நோய்த்தொற்றிற்கு ஆகாதவர்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலர் இணைந்து இந்த ஐந்து வழக்குகபை; பதிவு செய்துள்ளனர்.