2020ம் ஆண்டின் உழவர் திருநாளாம் தைத்திருநாளாகிய இன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தின் பாலையடிதோனா ஜீவபுர கிராம பத்தினியம்மன் ஆலய முன்றலில் 100 பொங்கல் பானைகள் வைத்து பிரதேச பெண்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.
லண்டன் அனைத்துலக மனிதநேய அமைப்பினால் எமது மக்களின் விருந்தோம்பல் பன்பினை மேம்படுத்தும் நோக்குடன் வறுமை அகன்று சமத்துவம் மேலோங்கி இன்னல்கள் அற்று மலரும் தைத்திருநாளில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நலன் கருதியும் உலகத் தமிழர்களின் தை பொங்கல் பண்டிகையை உலகறியச் செய்யவும் இவ் பொங்கல் வைபவ விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் விழாவில் சிறியோர்,பெரியோர் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதனை காணக் கூடியதாக இருந்தது.