இறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை! முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2019 (சனிக்கிழமை)
தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயகத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது, தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளை பறிகொடுத்த தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தில் தாய் இறந்தது தெரியாமல் தாய்ப்பால் குடித்த சிறுமியே இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில் முதல் சுடரை ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.