நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2019 (வெள்ளிக்கிழமை)
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
நிரந்தர வதிவிடங்களில் வசிப்போரை பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் தெரியாதவர்கள் சில பகுதிகளில் தங்கியுள்ளதால் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.