தற்போழுது சர்வதோச செய்தி ஊடாகங்கள் புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புகழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன.....
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)
புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது. CNN - அமெரிக்கா.
இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம். BFM - பிரான்ஸ்.
விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை. சிறீலங்கா அரசு.
1997 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் இலங்கையின் சனாதிபதியாக இருந்தபோது 'கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடம்' மீது பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் இரண்டாயிரம் kg வரையான வெடிமருந்தினை பார ஊர்தியில் எடுத்துச் சென்று வெடிக்க வைக்கப்பட்டிருந்தது.
கொழும்பு கோட்டை சனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைந்திருந்த குறித்த கட்டிடமும் அதனை அண்டிய பகுதிகளும் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடும் இடமாகும்.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,
குறித்த இலக்கின் மீது குண்டினை வெடிக்க வைப்பதற்கு முன்னர் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒலி பெருக்கி மூலம் 'குண்டு வெடிக்க உள்ளதாக' அறிவித்தல்கள் வழங்கி; பொது மக்கள் பாதுகாப்பான இடம் செல்லுவதற்கான போதுமான கால அவகாசத்தினை வழங்கிய பின்னரே குண்டினை வெடிக்க வைத்தனர்.
அதே போலவே 2001 ஆம் ஆண்டு இலட்சக் கணக்கில் மக்கள் புழங்கும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத் தாக்குதல்களின் போதும் கூட விமானப் பயணிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவிதப் சிறு பாதிப்புக்களும் இல்லாது பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இத்தகைய பல தாக்குதல்களின் மூலம் புலிகள் கடைப்பிடித்த அறத்தையும், மனித மாண்பையும் உலக நாடுகள் தமது பொருளாதாரம்,வியாபாரம்,சுயநலம் போன்ற காரணிகளை முன்னிட்டு உண்மையான விடுதலைப் போராட்டங்களையும், உலக அமைதிக்கே அச்சுறுத்தலான விளங்கும் பயங்கரவாதத்தினையும் வேறுபடுத்தி புரிந்துகொள்ளத் தவறிவிட்டது அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.
இன்று விடுதலைப் புலிகள் இல்லாததன் விளைவு முழு தென் ஆசியப் பிராந்தியங்களும் பதட்டமான அச்சுறுத்தல் நிலைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
வரலாறு ஒருநாள் எம் பக்கம் திரும்புமே
விலைபோகாத மக்களாக விடுதலையை வென்றிட ஓரணியில் நிற்பது காலத்தின் தேவையே!!