உலகக்கோப்பை 2019 - இந்திய அணி வீரர்கள் பட்டியலில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)
பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12-ஆவது (ஒருநாள் கிரிக்கெட்) உலக கோப்பை போட்டிகளுக்கான விராத் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்கின்றன.
இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த இருவர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இதுவரை உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அறிவிக்கப்படவுள்ள இந்திய அணி குறித்து சமூகவலைத்தளங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
இதுவரை 1983 மற்றும் 20111 ஆகிய இரு ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பையை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக 1983-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது.