யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் வட மாகாணத்தில் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெறுமானம் சேர் வரி அதிகரிக்கப்பட்டால் அதற்கேற்ப தொலைபேசி, மின்சாரம், நீர் போன்றவற்றின் கட்டணங்களும் உயர்வடையும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். வற் வரி அதிகரிப்பால் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே பெருமளவில் பாதிக்கப்படுவர் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.