பாரிய ராஜதந்திர நெருக்கடிக்குள் சிக்கியுள்ள ரணில்! காப்பாற்றுமா சீனா?
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2016 (புதன்கிழமை)
பாரிய ராஜதந்திர நெருக்கடிக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிக்கியுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் பல்வேறு உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
சீனா அரசாங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதி தொடர்பில் இந்தியாவில் இதுவரையில் இராஜதந்திர மட்டத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகர திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல், மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தின் உரிமையை சீனாவுக்கு வழங்குதல் தொடர்பில் இந்தியாவினால் சிறிலங்கா மீது கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரைவில் கலந்துரையாடல் மேற்கொள்ளவதற்காக இலங்கை அரசாங்கத்தின் விசேட பிரதிநிதி ஒருவரை புதுடில்லிக்கு அனுப்புமாறு இந்தியாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.குறித்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நேற்று அதிகாலை புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆயத்தமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.