தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதல் தீவிரமாக போராடி வரும் ஆர்வலர் கார்திகேய சிவசேனாபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர பிரதமரை வலியுறுத்த செல்கிறேன் என்று சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நேற்று 2வது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் விடிய, விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியால் தமிழகமே இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடிய இளைஞர்கள் மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும், தங்களது செல்போனில் உள்ள டார்ச்சுகளில் விளக்கையேற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் போராட்டங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் ஒரே கருத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால் பாஜக மட்டும் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றதையடுத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (04.01.2017) காலை தொடங்கியது. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சோதனை அதிகாலை 5.15 மணி முதல் மேற்கொள்ளப்பட்டது.
சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24
உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக சென்ற வைகோவுக்கு தி.மு.க. தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் திரும்பிச் சென்றார். அவர் வந்த கார் மீது செருப்புகளும் வீசப்பட்டன.