நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய திருவிழா கடந்த 20 திகதி கொடியோற்றத்துடன் ஆரம்பமாகி இன்று புனித நீக்கிலாரின் ஆசிருடன் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து புனித நீக்கிலார் ஆலய குரு மனைக்கான அடிக்கல் அதிவணக்கத்துக்குரிய யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் 29.04.2016 புனித நீக்கிலார் திருநாளன்று நாட்டப்பட்டது.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் நடாத்திய தேசிய சமூக வீடியோ கதைக்கான போட்டியில். சுண்ணாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் தொகுக்கப்பட்ட சமூக வீடியோவிற்கான விருது நாவாய்மண்ணின் மைந்தன் அலொக்ஸ் கமிலஸ் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இன்று இரவுப்பாடசாலை மானவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மிக நிறப்பாக இடம் பெற்றுள்ளது E.J.S TRADERS நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி-2016 நிகழ்வுகளின் போது...
600 இற்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய FA விலகல் முறையிலான போட்டித்தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது அணி. முதல் 32 அணிகளுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நாவாந்துறை மரியன்னை ஆலய பங்கு மக்களின் கடின உழைப்பினாலும் முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி இராஜசிங்கம் அடிகளாரின் உழைப்பினாலும் குருசடி தீவில் கடல் மார்க்கமாக அனைத்துப் பொருட்களும் எடுத்துச் சென்று கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு கடல் மார்க்கமாக யாத்திரிகர்கள் பயணம் செய்தனர்.
சில நாட்களுக்கு முன் கனடா Toronto தமிழர் தகவல் பத்திரிகையின் 25 வது ஆண்டு சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு விழாவில் நாவாய்மண்ணின் மைந்தன் திரு. ஷெல்லி பாரதி அன்ரனிப்பிள்ளை அவர்கள் கொரவிக்கப்பட்டடுள்ளார்.
நாவாந்துறை சென்மேரிஸ் பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட லூர்து அன்னையின் கெபியினை ஆயரினால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.