இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் நடாத்திய தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியில். சுண்ணாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் தொகுக்கப்பட்ட சமூக வீடியோவிற்கான விருது நாவாய்மண்ணின் மைந்தன் அலொக்ஸ் கமிலஸ் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த 24ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற இளைஞா் வீடியோ சம்மேளனத்தின் போது சிறந்த 10 தயாரிப்பாளா்களுக்கு விருது,சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் நாவாய்மண்ணின் மைந்தன் அலொக்ஸ கமல் அவர்களுக்கு 4ஆம் இடம் கிடைக்கப்பெற்றது.சமூக வீடியோ கதை என்பது -மக்கள் மக்களுக்காக மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கும் வீடியோ கதையாகும்.
இப் போட்டியின் போது இலங்கையின் நாலா பாகங்களிலும் இருந்து போட்டியாளா்கள் பங்கு கொண்டிருத்தனர்.
2 நிமிடத்தில் தயாரிக்கப்பட்ட இவ் வீடியோகள் திரையிடப்பட்டது. இதன் போது இலங்கையின் ஊடகத்துறை அமைச்சா்,மற்றும் தொலைகாட்சி மற்றும் பிரசித்தி பெற்ற ஊடக நிலையங்களின் பணிப்பாளா்கள்,தலைவா்கள்,பழ்கலை கழகங்களின் ஊடக பீட சிரோஷ்ட விரிவுரையாளா்கள் என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.