தமிழ் மக்களுக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் எதிராக தனது டுவிட்டர் பக்கத்தை கருணா பயன்படுத்தி வந்தமை காரணமாக அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாகவும் அத் தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் சார்ந்த சில விடயங்களையும் கருணா தனது அரசியலுக்காக வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் சைபர் போர்ஸ் என்ற அமைப்பினாலேயே கருணாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் தொடர்பாக கருணா வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
இது மட்டுமல்லாமல் சென்ற மே 18 அன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது,
அண்மையில் இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து சிறிலங்காவை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை உருவாக்கி உள்ளதாக சிங்கள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறிய நிலையில், இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.