ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2018 (திங்கட்கிழமை)
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் உச்சநீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை வித்தித்தது.
இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கைகள் வைத்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என இன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். தமிழக அரசு வெளியிட்ட ஆணையை ஆலை வெளி கதவில் ஒட்டப்பட்டுள்ளது.