நேற்று காணமல் போன மீனவர்கள் இன்று சகமீனவர்களின் தோடுதலில் கண்டுபிடிக்கப்பட்டனர்.(2ம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2018 (திங்கட்கிழமை)
நேற்று மதியம் குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற படகு உரிமையாளர் மற்றும் அவருடன் வேலைபார்க்கும் இருவரும், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தோனிஸ் மல்கன் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாகவும், இந்த தகவலை நயினாதீவு கடற்படையினருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தோனிஸ் மல்கனின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது. இதன்பின்னர், தோனிஸ் மல்கனின் மனைவி இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், கடற்படையின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
2ம் இணைப்பு
காணமல் போன மீனவர்கள் படககின் உரிமையாளர் மீன்டும் தனது மனைவியடம் தொடர்பு கொண்டு தங்கள் என்னும் கடலில் தத்தளிப்பதாகவும் இரவு முழுதும் பலத்த காற்று வீசியதாகவு குறிப்பிட்டுள்ளார் அதன் அடிப்படையில் சக மீனவர்கள் 3 படகுகளில் அவர்கள் குறிப்பிட்ட திசையை நோக்கி தோடுதலில் இடுபட்டனர் அதன் பயனாக மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போழுது கரைசேர்ந்துள்ளனர்.