பொறி வைத்து பிடித்தார் முன்னாள் தென்னாப்பிரிக்கா வேக பந்துவீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
வேலை இல்லை என்பதால், ஆஸ்திரேலியாவின் மோசடியை பொறி வைத்து பிடித்தார் முன்னாள் தென்னாப்பிரிக்கா வேக பந்துவீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ் (Fanie de Villiers).
இந்தத் தொடரில், அவர் ஒளிபரப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் கூறும்போது,
”ஆடுகளத்தில் புற்கள் இருக்கும் போது அது ரிவர்ஸ் ஸ்விங் ஆவது சாத்தியமே இல்லை. பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய ஆடுகளங்களில் 20 ஓவர்கள் முதலே அது சாத்தியம். ஆனால், 25,26 வது ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிகிறது என்றால், ஏதோ செய்கிறார்கள் எனச் சந்தேகித்தேன்.
அதன் அடிப்படையில் எங்களது கேமரா நபர்களிடம், பந்தை ஏதோ செய்கிறார்கள், அதன் மீது கவனம் செலுத்துங்கள் எனக்கூறினேன். சுமார் ஒன்றரை மணிநேர அலசலுக்குப் பின்னர், பான்கிராப்ட் பந்தை மறைத்து வைத்திருந்த ஒரு உலோகம் கொண்டு தேய்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்றார்.