வடக்கில் கைப்பற்றிய காணிகள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட வேண்டும்: வட மாகாண ஆளுநர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2016 (திங்கட்கிழமை)
யுத்தம் காரணமாக தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் கையகப்படுத்தப்பட்ட தனியாரின் காணிகளை உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.வடக்கில் உள்ள 10 வைத்தியசாலைகளில் எந்த மருத்துவர்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா கெலேபோகஸ்வெவ பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்த போதே ஆளுநர் இதனை கூறியுள்ளார்.வடக்கில் 10 வைத்தியசாலையில் மருத்துவர்கள் எவரும் இல்லை. சில வைத்தியசாலைகளில் மருத்துவர்களே மருந்துகளையும் விநியோகித்து வருகின்றனர்.
தாதியர்களும் இல்லை மருத்துவ ஊழியர்கள் இல்லை. வேறு மாகாணங்களில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு மருத்துவர்கள் வருவதில்லை. அவர்கள் வந்து இருக்க இங்கு வசதிகளை இல்லை. தாதியர்களுக்கும் இதே நிலைதான்.
தாதியர்களை இந்த மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யவும் முடியவில்லை.தாதியர் தேர்வுக்காண பரீட்சையை எழுதும் அளவுக்கு தகுதியான பிள்ளைகளும் இல்லை. இது பாரதூரமான பிரச்சினை என வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.